பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் கைபட்டை அணிவித்தல்

அம்பை, ஜன. 20:கல்லிடைக்குறிச்சியில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் கைப்பட்டை வழங்கப்பட்டது. அம்பை, விகேபுரம், கல்லிடைக்குறிச்சி சுற்று வட்டார பகுதியிலிருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு பொங்கல் மற்றும் தை பூசத்தையொட்டி விரதம் இருந்து முருக பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.  அவர்கள் இரவு மற்றும் அதிகாலையில்  குறுகலான  சாலையோரங்களில் நடந்து செல்லும் போது விபத்துகளை தவிர்க்க எஸ்ஐக்கள் கற்பக விநாயகம், ராஜா ஆகியோர் முருக பக்தர்களுக்கு சாலை விதிகள் குறித்து பேசி ஒளிரும் கை பட்டை வழங்கினர்.  இதில் இயக்கம் சாரா இளைஞரணி தலைவர் அமீன், செயலர் மன்சூர், துணை செயலர் சுலைமான், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், பொருளாளர் சாகுல்ஹமீது,  சுலைமான், சித்திக், கலீல். மாரியப்பன், சிவா, இளையராஜா, மாரி, சுஹைல், சகுல் உள்ளிட்ட உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு ஒளிரும் கை பட்டை அணிவித்தனர். அவர்களை பக்தர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: