8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டம்

சேலம், ஜன.20: உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம், 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டம் குப்பனூரில் நடந்தது. கூட்டத்துக்கு பேரியக்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாராயணன் மற்றும் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். வரும் 26ம் தேதி கிராமசபை கூட்டத்தில், எட்டு வழிச்சாலையை ரத்து செய்யக்கோரியும் தீர்மானங்களை நிறைவேற்றுவது என்றும், 8 வழிச்சாலை சம்பந்தமாக யூனியன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கு வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த பற்றிய  விசாரணையில் வழக்குகளில் வக்காலத்து போடுவது என்றும், அதன்மீது ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என்றும், பஞ்சாயத்து தலைவருக்கான அதிகாரித்தின் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் தலையீடு மூலம் தலைவர் அதிகாரத்தை ஒழித்து கட்ட, மாநில அரசு தலையிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்றும், பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது என்றும், மத்திய அரசை வழக்கை வாபஸ் பெற வேண்டியும் இந்த போராட்டம் நடக்கும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: