சேலத்தில் மினிமாரத்தான் போட்டி

சேலம், ஜன.20: சேலம் மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மின்னணு கழிவு இல்லா சேலம் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி, மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் 1500 பேர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு  மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மின்னணு கழிவு இல்லா சேலம் என்ற  விழிப்புணர்வை வலியுறுத்தி, மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டியை  நடத்தியது. சேலம் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியை, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், மணிபால் மருத்துவமனை இயக்குனர் லெட்சுமணன், மாவட்ட தடகள சங்க துணைத்தலைவர் அன்புக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பெண்கள் உள்பட 1500 பேர் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்பட்டவர்கள், 14 வயதுக்கு மேல் என இரு பிரிவாக போட்டி நடந்தது. 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் காந்தி ஸ்டேடியத்தில் இருந்து அம்பேக்தர் சிலையை சுற்றி மீண்டும் ஸ்டேடியத்தை அடைதல், 14 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் காந்தி ஸ்டேடியத்தில் இருந்து காந்திரோடு, 4 ரோடு வழியாக மீண்டும் ஸ்டேடியத்தை அடைதல் என போட்டி நடந்தது. இரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: