×

ஒப்பந்த அடிப்படையில் நாமக்கல்லில் கால்நடை மருத்துவர்கள் நியமனம்

நாமக்கல், ஜன.20:  நாமக்கல் ஆவினில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைக்கவும், அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும்  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் கால்நடை மருத்துவர் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாதகாலம் பணியாற்ற அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு  பிவிஎஸ்சி படித்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் குறித்து அறிந்திருக்க வேண்டும்.  மாத சம்பளமாக ₹34 ஆயிரத்து 500 வழங்கப்படும். இந்த பணி ஒப்பந்த அடிப்படையில், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாத காலங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த நேரடி நியமனத் தேர்வு நாமக்கல்  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில்(ஆவின்) வரும் 24ம் தேதி காலை 11 மணி முதல் மதியம 1 மணி வரை நடைபெறுகிறது. எனவே, தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal ,Veterinary Surgeons ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...