×

தர்மபுரியில் அவரை விளைச்சல் பாதிப்பு

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி  மாவட்டத்தில் பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதலால் அவரை விளைச்சல்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உழவர் சந்தைகளில் அவரை கிலோ ₹26 வரை விற்பனை  செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 800 ஏக்கருக்கு மேல் அவரை  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம்,  பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தாலுகாவில் அதிகளவில் அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலவி வரும் கடும்  பனிப்பொழிவால் அவரை செடிகள் காய்ந்து கருகியது. மேலும், பூச்சி  தாக்குதலினாலும் அவரை விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு அவரை  வரத்து சரிந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று அவரை ₹24-₹26 வரை  விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டியை முடிந்த நிலையில் அவரை அறுவடை  தொடங்கியுள்ளது. இதனால் விலை சரிய வாய்ப்புள்ளதாக  விவசாயிகள்  தெரிவித்தனர்.

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...