கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜன.20: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியூ மாநில செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குமார், சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், மாவட்ட செயலாளர், அர்ஜீணன், மாவட்ட துணைத்தலைவர் பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுகான விலையை தீர்மானிக்க வலியுறுத்தி, கடந்த 1982ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராடிய நாகை மாவட்ட தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். இந்த தினத்தை உழைக்கும் வர்க்க தியாகிகள் தினமாக கடைபிடித்து விவசாயிகள்-தொழிலாளிகள் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தை பாதுகாக்க விவசாய தொழிலாளர்களுக்கு ஊரக வேலை உறுதி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Demonstration ,CITU ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு