தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி

தர்மபுரி, ஜன.20: தர்மபுரியில், மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டிகள் இரண்டு நாள் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி 2 நாள் நடந்தது. இந்த போட்டியை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வெற்றிவேல், வருவான் வடிவேலன் கல்லூரி தாளாளர் வடிவேலன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து 27 அணிகள் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ₹30,000 வழங்கப்படுகிறது. 2ம் பரிசு ரூ.20,000, 3ம் பரிசு ரூ.15,000, 4ம் பரிசு ரூ.10,000 வழங்கப்படுகிறது. துவக்க விழாவில் தர்மபுரி நகர கால்பந்து குழு தலைவர் கோவிந்தராஜ், ஒன்றியக்குழு தலைவர் செல்வம், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் பூக்கடை ரவி மற்றும் அருள்குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு 2வது நாள் போட்டி நடந்தது.

Tags : State Level Electronic Football Tournament ,Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் திமுக எம்பி அலுவலகம்