மாற்று கட்சியினர் 40 பேர் திமுகவில் இணைந்தனர்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் லளிகம் ஊராட்சியில் இருந்து அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ முன்னிலையில், 40க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். தொண்டரணி துணை அமைப்பாளர் எல்டி பழனிசாமி ஏற்பாட்டில் இவர்கள் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில்,
மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் பொன்.மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : parties ,DMK ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு இரட்டை...