சிஏஏ, என்பிஆரை எதிர்த்து தர்மபுரியில் அனைத்துக்கட்சி பேரணி, ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரியில் சிஏஏ, என்பிஆர் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி சார்பில் இன்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துக்கட்சி, சமூக அமைப்புகள் சார்பில், தேசிய குடியுரிமை சட்ட திருத்தம்(சிஏஏ), என்பிஆர் ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இன்று(20ம்தேதி) பிற்பகல் 2 மணிக்கு தர்மபுரியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வேல் பால் டெப்போ அருகில் இருந்து புறப்படும் பேரணி பிஎஸ்என்எல் அலுவலகம் வரையிலும் நடக்கிறது. பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இப்போராட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, மதிமுக, திக மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற அனைத்துக்கட்சிகளும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன. எனவே, போராட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CAA ,rally ,NPR ,Dharmapuri ,
× RELATED சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை தடை செய்ய வேண்டும்: குஷ்பு பேட்டி