×

அமைச்சரவை கூட்டத்தில் குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் முதல்வருக்கு பி.ஆர் பாண்டியன் வேண்டுகோள்

முத்துப்பேட்டை, ஜன.20: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் நேற்று முத்துப்பேட்டை பகுதியில் மழையால் அடியோடு சாய்ந்த சம்பா பயிர்களை பார்வையிட்டு இறுதியாக முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி வந்தார்.அப்பகுதியில் அடியோடு சாய்ந்த சம்பா பயிர்களை பார்த்து அங்கிருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பிஆர்பாண்டியன் கூறுகையில: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சுமார்12 லட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா பயிர்கள் பொங்கல் பண்டிகையோடு அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில்கடந்த 2 தினங்களாக பருவம் மாறி பெய்த கடும் மழையால் சுமார்5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் கதிர்கள் அடியோடு சாய்ந்தது.பல இடங்களில் நீரால் சூழப்பட்டும் உள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்து உள்ளனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் பாதிப்பை உணர்ந்து சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்கள் நெல் குவிண்டால் 1க்கு ரூ. 2500 ம் கேரளா மாநிலம் ரூ.2,650 வழங்கி கொள்முதல் செய்வதை பின்பற்றி ரூ.2,500 வழங்கிட நாளை நடைபெற உள்ள 2020 தமிழக அமைச்சரவை முதல் கூட்டத்தில் முடிவெடுக்க முதலமைச்சரைவேண்டுகிறோம். அறுவடை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தேவைக்கேற்ப அறுவடை இயந்திரங்களை வரவழைத்து தடையின்றி கொள்முதல் செய்திட வேண்டுகிறேன் என்றார்.

Tags : BR Pandian ,cabinet meeting ,CM ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...