×

வடகோவனூர் ஊராட்சியில் மாற்று கட்சிகளை சேர்ந்த 50 குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர்

மன்னார்குடி, ஜன. 20; மன்னை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடகோவனூர் ஊராட்சியில் இருந்து பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 50 குடும்பத்தினர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடகோவனூர் ஊராட்சியில் இருந்து மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா கொரடாச்சேரி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐவி குமரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மன்னை கிழக்கு ஒன்றியம், வடகோவனூர் ஊராட்சியில் இருந்து திமுக ஊராட்சி செயலாளர் ரமேஷ் முயற்சியாலும், திருவாரூர் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். \இதில், மாவட்ட பிரதிநிதிகள் அரிச்சபுரம் செல்வம், சுப்பிரமணியன், ஒன்றிய அவைத் தலைவர் அருண், ஒன்றிய பொருளாளர் ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : families ,alternative parties ,DMK ,Vadakkovanur ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...