×

மத்திய பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா?

மன்னார்குடி, ஜன. 20: 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு விட்டதால் ரயில்வே திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில் சேர்ந்து இடம் பெறும். டெல்டா மாவட்டங்களில் மன்னார்குடி, பட்டுக்கோட்டை புதிய பாதை திட்டம், திருக்குவளை வழி நாகப் பட்டினம் - திருத்துறைபூண்டி புதிய பாதை திட்டம், பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய பாதை திட்டம் திருத்துறைப்பூண்டி,அகஸ் தியம்பள்ளி அகலப்பாதை திட்டம், பேரளம் - காரைக்கால் அகலப்பாதை திட் டம் என ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டு உள்ளது. அகலப்பாதை திட்டங்கள் இரண்டும் விரைவில் நிறைவடைய உள்ளது.

நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய பாதை திட்டம் சர்வே எடுத்ததோடு பணிகள் எதுவும் துவக்கப்படாமலே கிடப்பில் கிடக்கிறது.. மன்னார்குடி- பட்டுக்கோட்டை திட்டத்தில் பாலம் கட்டுமான பணிகள் மட்டும் துவங்கி அப்பணிகளும் பாதியில் நிற்கிறது. கடந்த 2019ம் ஆண்டு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி இத்திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் துவங்கி விட்டதாக தெரிவித்தார். எனவே டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் போன்ற எதிர்பார்ப்பு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதுகுறித்து இளம் தொழில் முனைவோர் இள அருண் கூறுகையில், 41 கி.மீ தூரத்திற்கான மன்னார்குடி, பட்டுக்கோட்டை இடையிலான புதிய பாதை திட்டம் 2010 ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது அறிவிக்கப் பட்டது. மன்னார்குடி நீடாமங்கலம் இடையே 13 கி.மீ தூரத்திற்கு பணிகள் மட்டுமே ரூ.79 கோடி செலவில் முடிக்கப்பட்டு கடந்த 2011ம்ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இத்திட்டம் நிறைவேற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவது ஏற்புடையதல்ல. எனவே மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதை அமைக்க தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்ய பட்ஜெட்டில் தனிநிதி ஒதுக்க வேண்டும். பணிகளை விரைவாக மேற்கொள்ள நில ஆர்ஜிதம் செய்ய தனி தாசில்தார் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் விவேகானந்தன் கூறுகையில், 2012ம் ஆண்டு விரிவான சர்வே மன்னார்குடி பட்டுக்கோட்டை இடையே எடுக்கப்பட்டது. ரூ 8.7 கோடி கண்ணனாறு பாலமும், ரூ 7.2 கோடி மதிப்பில் நசுவானி ஆற்றுப்பாலமும், ஏறக்குறைய அதே மதிப்பில் பாமணி ஆற்றுப்பாலம் என மூன்று பெரிய பாலங்கள் 2013ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட பாலம் கட்டுமான பணிகள் அஸ்திவாரத்தோடு நிற்கிறது.பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் திட்டம் அறிவிப்போடு மட்டுமே நிற்கிறது. இத் திட்டத்திற்கு சர்வே அடிப் படையில் திட்டம் வரையறை செய்து பாதை வரைபடம் மற்றும் மதிப்பீடுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் தர வேண்டும்.

நிதி ஒதுக்கீடும் வேண்டும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்பதே பட்டுக்கோட்டை நகர மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது என்்றார். மன்னை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சூர்யபிரகாஷ் கூறுகையில், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது சரியல்ல. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 11 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு கடந்தாண்டு பட்ஜெட் டில் மத்திய அரசு வெறும் ரூ.55 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது நியாயமானது அல்ல. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு மன்னார்குடி, பட்டுக்கோட்டை புதிய பாதை திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் நடைமுறையில் போதிய நிதிகளை ஒதுக்கீடு செய்யாததால் அப் பணிகள் முடங்கி போய் உள்ளன. எனவே மத்திய அரசு எதிர் வரும் பட்ஜெட் டில் டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு சிறப்பு கூடுதல் நிதி ஒதுக் கீடு செய்து கிடப்பில் கிடக்கும் திட்டங்களின் பணிகளை துவக்கி அப்பணி களை தொய்வில்லாமல் முடித்து டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சியை உறுதி படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், நாகப்பட்டினம், திருத்துறை பூண்டி இடையிலான புதிய பாதை திட்டத்தில் 100 சதவீதம் நில ஆர்ஜிதம் முடிவடைந்து விட்டது. மற்ற தமிழக புதிய பாதை திட்டங்களுக்கு சராசரியாக 20 சதவீதமே நில ஆர்ஜிதமே நடந்து இருக்கிறது. மேலும் இத்திட்ட பணிகள் ஏறத்தாழ 70 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. மன்னார்குடி, பட்டுக்கோட்டை இடையிலான திட்டத்திற்கு 196 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இது திருவாரூர்- காரைக்குடி அகலப்பாதை திட்டத் தின் விரிவாக்கம் ஆகும். காரைக்குடி - திருவாரூர் பாதையில் பணிகள் நிறை வடைந்து போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால், வரும் 2020-21 நிதியாண்டு இந்த அகலப்பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இத்திட்டத்திற்கே கிடைக்கும். திருத்துறைப்பூண்டி,அகஸ்தியம்பள்ளி இடையிலான திட்டம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. பேரளம், காரைக்கால் இடையிலான திட்டமும் போதுமான நிதி ஒதுக்கீடு பெற்று வேகமாக நடந்து வருகிறது. பட்டுக் கோட் டை, தஞ்சை இடையே ஆன வழித்தட திட்டம் விரைவில் இறுதி செய்யப் பட இருக்கிறது. மாநிலத்தின் மற்ற புதிய பாதை திட்டங்களோடு ஒப்பிடுகை யில் டெல்டா மாவட்ட திட்டங்கள் வேகமாகவே நடந்து வருகின்றன என்றார்.

Tags : Delta District Railways ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...