குடிமகன்கள் அட்டகாசம் தஞ்சை மாவட்டத்தில் 2.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கல்

தஞ்சை, ஜன.20: தஞ்சை மாவட்டத்தில் நேற்று சுமார் 2.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் நடந்த துவக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். அமைச்சர் துரைக்கண்ணு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.பரசுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணை தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த சாக்கோட்டையிலுள்ள பெரியார் பகுத்தறிவு பாடசாலை பள்ளியில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், தாராசுரம் ஒன்றிய பள்ளியில் கும்பகோணம் ஒன்றியக்குழு தலைவர் காய்த்ரிஅசோக்குமார் ஆகியோர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துசெல்வன் மற்றும் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர், பம்பப்படையூரிலுள்ள பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினர். இதேபோல் அந்தந்த பகுதிகளில் ஒன்றிய குழு தலைவர்கள் தேவி, சுபா, ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள் கணேசன், அண்ணாதுரை, கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பெருமாண்டி பாஸ்கர், கள்ளப்புலீயூர் முருகன் உள்ளிட்டோர் போலியோ சொட்டுமருந்துகளை வழங்கினர்.

கும்பகோணம் மேலக்காவிரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகர் நல அலுவலர் பிரேமா, திருப்பனந்தாள் வட்டார மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் அபினேஷ், திருவிடைமருதுார் வட்டார மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் போலியோ சொட்டு மருந்துகளை வழங்கி தொடங்கி வைத்தார். பாபநாசம்: பாபநாசம் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல், மருத்துவர் கார்த்திக் கேயன், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர். வன்னியடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் ராேஜந்திரன் தொடங்கி வைத்தார்.

Related Stories: