×

திருமயம் பகுதியில் தேசிய சாலையில்

திருமயம், ஜன.20: திருமயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து நடக்கும் சூழல் உருவாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம் வழியாக மதுரை, காரைக்குடி, ராமேஸ்வரம் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிரித்து வருகிறது. இந்த சாலை 8 ஆண்டுகளுக்கு முன்னர் மாநில சாலையாக இருந்தது. தற்போது தேசிய சாலையாக மாற்றம் கண்டது. இதற்காக பலர் விவசாய நிலம், வீடுகளை இழந்ததோடு பல ஆயிரம் மரங்கள், நீர் நிலைகள் அழிக்கப்பட்டது. இருந்த போதிலும் வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை பின்பற்றாததாலும், வாகன ஓட்டிகளின் கவனக்குறைவாலும் வருடம்தோறும் 30க்கும் மேற்பட்டோர் திருமயம் பகுதியில் உள்ள தேசிய சாலையில் விபத்துகுள்ளாகி இறக்க நேரிடுகிறது.

இதனிடையே இந்த சாலையில் நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு திருமயம் பகுதியில் சாலையோர உணவுகடைகள், பெட்டிக்கடைகள் அதிகளவு திறக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சாலையோரம் உள்ள கடைகளுக்கு சாப்பிட செல்லும் வாகனஓட்டிகள் வாகனத்தை தேசிய சாலையில் உள்ள இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் பயன்படுத்தும் சாலையை மறித்து நிறுத்துவதால் இது இருசக்கர வாகனஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள் கனரக வாகனங்கள் செல்லும் சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் கனரக வாகனத்தை சாலையோரம் எந்த ஒரு முன்னெச்சரிக்கையுமின்றி நிறுத்துவது வாகன விபத்துக்கு வழிவகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற சாலையோர கடைபகுதியில் நிறுத்தும் வாகனங்களை மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்தும்படி கேட்டுக்கொள்வதோடு சாலையோர கடைகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,area ,Tirumayam ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...