அதிமுக பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது

அரியலூர், ஜன.20: வி.கைகாட்டி அருகே அயன்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி பாக்கியலெட்சுமி(52). இவர் விடுதலை சிறுத்தை கட்சியில் முகாம் செயலாளராக இருந்து வந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி உறுப்பினருக்கு நின்று தோல்வியடைந்த பின்னர் அதிமுகவில் அவரது கணவருடன் இணைந்தார். இதனால் அதே ஊரைச் சேர்ந்த செல்லமுத்து மகன் தங்கராசு(35)என்பவருக்கும் பாக்கியலெட்சுமிக்கும் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி தங்கராசு மகன் சச்சின், உறவினர்கள் தங்கவேல் மகன் தமிழரசன், மேனகா, முருகேசன், சரவணன், நெப்போலியன், சூரியா, ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து பாக்கியலெட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் பாக்கியலெட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நெப்போலியன், முருகேசன் ஆகியோரை கைது செய்து தலைமறைவான 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்