பொங்கல் விழாவில் தகறாறு 2 பேருக்கு அரிவாள் வெட்டு வாலிபருக்கு வலை


குளித்தலை, ஜன. 20: குளித்தலை அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலைை அடுத்த பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூரை சேர்ந்தவர் கணேசன் மகன் பால நிவாஸ். இவர் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக நின்று கொண்டு ஆடிப்பாடி கொண்டிருந்தாராம். அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் புவனேஸ்வரன்(33), ராஜலிங்கம் மகன் கணேசன்(40) ஆகிய இருவரும் கோயில் திருவிழாவில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பால நிவாசை எச்சரித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த பால நிவாஸ் அருகில் உள்ள மீன் கடையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து புவனேஸ்வரன், கணேசன் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பால நிவாசை தேடி வருகின்றனர்.

Tags : festival break ,
× RELATED மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்