கறம்பக்குடி ஒன்றிய அளவில் சைக்கிள் தின விழா பேரணி

கறம்பக்குடி, ஜன.20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் அளவில் சைக்கிள் தின விழா நடை பெற்றது இந்த சைக்கிள் தின விழா வை முன்னிட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் குழந்திரான்பட்டு ஊராட்சி யில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி வளாகம் முன்பு ஊராட்சி சார்பில் சைக்கிள் தின விழா பேரணி நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்திரான்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் நலதேவன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைக்கிள் தின விழாவில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மாலா ராஜேந்திர துரை கலந்து கொண்டு தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பணித்தல பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஊராட்சி செயலர் நன்றி கூறினார். அதேபோல ஊராட்சி ஒன்றிய அளவில் 39 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடி யசைத்து சைக்கிள் தின விழா பேரணியை தொடங்கி வைத்தனர்.

Tags : Cycle Day Festival Rally ,Karampakkudy ,
× RELATED கறம்பக்குடி ஒன்றிய உள்ளாட்சி தேர்தல்...