×

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

கறம்பக்குடி, ஜன. 20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அதிமுக நகரம், ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 103வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடினர். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கடந்த 17ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அதிமுக நகரக் கழகம் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் நகர அதிமுக செயலாளர் எம்ஜிஆர் அப்துல்லா தலைமை வகித்தார். ஒன்றிய அதிமுக செயலாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்று கறம்பக்குடி கடை வீதி முழுவதும் சென்று பின்னர் இறுதியாக மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள எம்ஜியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி அதிமுக நகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் , தொண்டர்கள் , உள்ளாட்சி பிரதி நிதிகள் , ஊராட்சி செயலாளர்கள் , கூட்டுறவு சங்க தலைவர்கள் , இயக்குனர்கள் , கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : MGR ,Birthday Party ,
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...