பெண்ணை தாக்கி காயப்படுத்தியவர் கைது

மேலூர், ஜன. 20:பெண்ணை அடித்து காயப்படுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலூர் அடுத்த கீழவளவு அருகில் உள்ள குழிச்செவல்பட்டியை சேர்ந்தவர் முனிச்சாமி மனைவி காளியம்மாள். இவரின் வயலில் உள்ள கிணற்றை சருகுவலையபட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோர் சேதப்படுத்தி உள்ளனர். இதனை காளியம்மாள் தட்டிக்கேட்க, அவரை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அடித்து காயப்படுத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>