தகராறில் டூவீலரை சேதப்படுத்தியவர் கைது

திருமங்கலம், ஜன.20: சிந்துபட்டி அருகே தகராறில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள டூவீலரை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.சிந்துபட்டி அடுத்துள்ள கள்ளபட்டியை சேர்நதவர் முத்துசாமி மகன் அஜய்(22). ஆந்திராவில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டினை சேர்ந்தவர் செல்வம்(34). இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் பொங்கல் விடுமுறைக்கு வந்த அஜய்க்கும், செல்வத்திற்கும் தகராறு எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் அஜய்யின் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டூவீலரை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து அஜய் கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.Tags :
× RELATED சீட் பிடிப்பதில் தகராறு ஓடும் ரயிலில் ஒருவர் அடித்துக்கொலை