மதுரை வாலிபர் கொலையில் 3 பேர் கைது

மதுரை, ஜன. 20: மதுரை வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர்.மதுரை, ஆனையூர் எஸ்விபி நகர் 2வது தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் உதயா (28). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் குலமங்கலம் ரோட்டில் எஸ்.ஆலங்குளம் பகுதியில் ஒரு கடை முன்பு உதயா நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் அங்கு வந்த 2 பேர், உதயாவின் அருகே டூவீலரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் உதயாவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் குலமங்கலம் பகுதியில் தலைமறைவாக இருந்த தியாகு என்ற தியாகராஜன் (23), முல்லைநகரைச் சேர்ந்த துரைப்பாண்டி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரித்தபோது, ‘தியாகு அண்ணன் சரண்ராஜ் (24) என்பவருக்கும் உதயாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்ராஜூவை உதயா சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தனது தம்பி உதயாவிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ஆத்திரத்தில் அண்ணனை தாக்கியவரை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என நினைத்து தனது நண்பர் துரைப்பாண்டி உதவியுடன் சென்று கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே சரண்ராஜ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>