2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மதுரை மாவட்டத்தில்

மதுரை, ஜன. 20: மதுரை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. இது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் செல்லூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் வினய் தலைமையில், அமைச்சர் செல்லூர் ராஜூ குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை ஊற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு அமைச்சர் பரவையில் உள்ள ஆரம்ப சுகாரா மையத்திலும், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றினார். அதேபோன்று, புதிதாக நியமிக்கப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த பகுதியில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினர்.

மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் ஆகிய பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையத்திலும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் சென்ட்ரல் மார்க்கெட், தெற்குவாசல் மார்க்கெட், தாலுகா மருத்துவமனைகள்,

ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து ஊற்றப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு முகாம் மூலம் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று ஊற்றப்பட்டது.

Related Stories: