பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது

மதுரை, ஜன. 20: மதுரையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை செல்லூர் கே.வி. சாலையில் இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் இந்திரா நகரைச் சேர்ந்த பாலமுருகன் (55), முத்துக்காளை (40), பாக்கியலட்சுமி (35) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர் திருப்பதி செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பாக்கியலட்சுமி உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட முனிவேல் புஷ்பராணியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

Tags :
× RELATED தம்மம்பட்டியில் பரபரப்பு...