காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு

பெரம்பலூர்,ஜன20: பெரம்பலூரில் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரிமின்கம்பத்தில் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநரின் மின்னல்வேக நடவடிக்கையால் குடி யிருப்புகளுக்கிடையே ஏற்படவிருந்த மிகப் பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இண்டேன் காஸ் விநியோகம் செய்யும் தனியார் காஸ் ஏஜன்ஸி ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நேற்று காலை திருச்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை குடோனுக்கு செல்ல திருப்பிய போது லாரி மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்து, மின் கம்பிகள் லாரி மீது விழுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பிகளிலிருந்து திடீரென மின்சாரம் பாய்ந்து காஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைக்கண்ட லாரி ஓட்டுநர் மின்வாரியத்துக்கு உடனே தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்கச் செய்தார். மேலும் உடனுக்குடன் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதோடு தன்னம்பிக்கையுடன் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் லாரியில் வைத்திருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டு தீயை அணைத்தார்.

இதில் ஒரு காஸ் சிலிண்டர் மட்டும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. லாரி ஓட்டுநரின் மின்னல் வேக நடவடிக்கையால் குடியிருப்புகளுக்கிடையே நடைபெறவிருந்த பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. துரித மாகவும், துணிச்சலாகவும் செயல் பட்டு பெரும் தீ விபத்தை தவிர்த்த லாரி ஓட்டுநரை பெரம்பலூர் நகர தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இருந்தும் சம்மந்தப்பட்ட தனியார் காஸ் ஏஜென்ஸியினர், லாரி ஓட்டு நரை அங்கிருந்து சீக்கிரம் அனுப் பியதோடு, அவரது பெயரைத் தெரி விக்கவும் மறுத்துவிட்டனர். இதனால் அவர் கேஸ் ஏஜென்சி லாரிக்கான டிரைவரா அல்லது வேறு டிரைவரை மாற்று ஏற்பாடுக்காக அழைத்து வந்துள்ளனரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : collision ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்