நேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர், ஜன.20: அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடியில் நேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் ஊராட்சி தலைவர் நடராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணை தலைவர் அறிவழகன், பெரியமறை மகளிர் சுயஉதவிக்குழு தலைவி நாகவள்ளிசெல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா தேவேந்திரன், நீர் மேலாண்மை குறித்தும், உடற்கல்வி ஆசிரியர் சின்ராஜ் உடற்க்கல்வியின் அவசியம் குறித்தும், உமாகண்ணன் யோகாவின் அவசியம் குறித்தும், சந்தோஷ்குமார் பொதுநலம் குறித்தும் கருத்துரை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை நேரு யுவகேந்திரா அமைப்பினர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED மாநகராட்சி ஆணையர் தகவல் முசிறி எம்ஐடி...