×

ரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்

அரியலூர்,ஜன.20: அரியலூர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளையின் நூற்றாண்டு விழா குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் கலையரசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆறு ஒன்றியங்களில் இருந்தும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மோட்டார் சைக்கிள் தொடர்பயணம் பிப்ரவரி 6-ல் கன்னியாகுமரியில் தொடங்கி அனைத்து மாவட்டங்கள் வழியாகவும் சென்று மார்ச் 11-ல் சென்னையில் ஆளுநர் அவர்களிடம் கொடியினை கொடுத்து பேரணி முடிவடையும். இப்பேரணி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிப்ரவரி 25-ல் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளது. பேரணி ஆறு ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாலை 5 மணி அளவில் திருச்சி மாவட்டத்திடம் ஒப்படைக்கப்படும். இப்பேரணியில் 50 மோட்டார் சைக்கிளில் பங்கேற்கவும்.

மேலும், பள்ளி அளவில் உள்ள ஜூனியர்களுக்கு மனித நேய செயல்பாடு என்ற தலைப்பில் ஓவிய போட்டியும், பள்ளியின் சுகாதார தூதுவராக ஜூனியர் ரெட்கிராஸ் தொண்டர் - என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும், நட்புறவை மேம்படுத்துவதில் ஜூனியர் ரெட்கிராஸ் தூதுவரின் பங்கு - என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் ஜனவரி 30-ல் கல்வி மாவட்ட அளவிலும், பிப்ரவரி 2-ல் மாவட்ட அளவிலும் போட்டிகள் 6 - 8 வகுப்பு பிரிவு, 9 - 12 வகுப்பு பிரிவு என இருபிரிவுகளில் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 21-ல் மருத்துவ முகாமும், ரத்ததான முகாமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து தூய்மை பாரதம், முதலுதவி பயிற்சி, மரம் நடுதல் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. முன்னதாக இணைச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். இறுதியில் பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Tags : Red Cross Centennial Committee Meeting ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி,...