×

செந்துறை அருகே மோதல் மூவர் கைது

அரியலூர், ஜன.20: பொங்கல் விழாவையொட்டி அனைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறுவர் முதல்வர் பெரியவர்கள் வரை பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடைக்கலம்பூரில் காணும்பொங்கல் பண்டிகையன்று பட்டாசு வெடித்தபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இடைக்கலம்பூர் கிராமத்தை சேர்ந்த (அதிமுக) சிலம்பரசன் (32) மற்றொரு தரப்பான (தவாக) வேலு(42), ராஜேந்திரன்(32) ஆகிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : clash ,Centurion ,
× RELATED நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை; கரும்பு,...