சீரமைக்கப்படுமா? விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

அரியலுர், ஜன.20: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து தலைவராக ரவிக்குமார்(40) உள்ளார். இவர் அதே ஊரில் காணும்பொங்கல் விளையாட்டு போட்டியில் பரிசுகள் வழங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிலையில் அதே பகுதி சேர்ந்த பிரசாத்(32), பிரபு(36), ஹரிபாபு(23), செந்தில்குமார்(30), நேரு(33), இளவரசன்(38) ஆகியோர் சேர்ந்து பஞ்சாயத்து தலைவர் ரவிக்குமாரை பரிசுகளை வழங்க விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் எஸ்.ஐ செல்வராஜ் வழக்கு பதிந்து பிரசாத், பிரபு ஆகியோரை கை செய்து மற்ற 4 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags : Ciramaikkappatuma ,Sports activists ,murder ,panchayat leader ,Vikramamangalam ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது