×

பொதுமக்கள் கோரிக்கை குடியுரிமை சட்ட திருத்த

தரங்கம்பாடி, ஜன.20: இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி நாகை மாவட்டம் சங்கரன்பந்தலில் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டமும், மயிலாடுதுறையில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
நாகை மாவட்டம், சங்கரன்பந்தலில் மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இலுப்பூர், சங்கரன்பந்தல் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு சங்கரன்பந்தல் ஜாமிஆமஸ்ஜித் தலைமை இமாம் சாகுல் ஹமீது ரஹ்மானி தலைமை வகித்தார். பேரணி சங்கரன்பந்தல், காயிதமில்லத்தெரு மற்றும் இலுப்பூர் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சங்கரன்பந்தல் பள்ளிவாசல் தெருவை வந்தடைந்தது. அங்கு குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை செயலாளர் அன்வர்பாதுஷா உலவி, எழுத்தாளர் சுந்தரவள்ளி, பேராசிரியர் ஜெயராமன், திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், ஒன்றிய பொறுப்பாளர் அப்துல்மாலிக், முன்னாள் எம்எல்ஏ சித்திக், மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய அமைப்பு மாநில துணை செயலாளர் முஜிபுர்ரஹ்மான் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ஜமாஅத் தார்கள் தலைமை வகித்தனர். பெருமாள்கோயில் ஊராட்சி பாலு,மேலையூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், தொழுதாலங்குடி ஊராட்சி தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பச்சைதமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், பேராசிரியர் ஜெயராமன், நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் தலைவர் காளியம்மாள், எஸ்டிபிஐ. அபுபக்கர் உள்பட பலர் கலந்து கண்டன உரையாற்றினர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...