×

வெங்கமேடு காவல் நிலையத்திற்கு செல்லும் குண்டும் குழியுமான மண் சாலையால் மக்கள் அவதி

கரூர், ஜன. 20: கரூர் வெங்கமேடு காவல் நிலையத்துக்கு செல்லும் மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற தேவையான ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி பகுதியில் வெங்கமேட்டில் உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. வாடகை கட்டிடத்தில் வெங்கமேடு காவல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தெற்கு அருகம்பாளையம் பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட்டது. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதி சாலைகள் தார்ச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வெங்கமேடு காவல் நிலையத்துக்கு செல்லும் சாலை மட்டும் கடந்த பல ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக மண்சாலையாகவே உள்ளது.

இதனால் காவல் நிலையத்துக்கு சென்று வரும் போலீசாரும், புகார் தெரிவிக்க சென்று வரும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து தரப்பினர்களும் எளிதாக சென்று வரும் வகையில் வெங்கமேடு காவல் நிலையத்துக்கு செல்லும் மண்சாலையை தார்ச்சாலையாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்துக்கு செல்லும் இந்த மண்சாலையை தார்ச்சாலையாக்க உள்ள பிரச்னைகளை எளிதில் களைந்து, விரைவில் தார்ச்சாலையாக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : dirt road ,police station ,Venkamedu ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...