பாக்ஸ் பஸ், காரில் சென்ற குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை சார்பில் விக்கிரவாண்டி டோல்கேட்டில் நடந்த  போலியோ முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கி துவக்கி  வைத்தார். பஸ், கார்களில் பயணித்த சுமார் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.  இதில் டாக்டர் ராமகிருஷ்ணன்,  சுகாதார மேற்பார்வையாளர்கள் கிருஷ்ணன், ராஜசேகர், சுகாதார ஆய்வாளர்கள்  பிரதிவி, பாபு, செவிலியர் செல்வி மற்றும் இ.எஸ். செவிலியர் கல்லூரி மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. மருத்துவ அலுவலர் அகிலன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக்லத்தீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி, பகுதி சுகாதார செவிலியர் முத்தாம்பிகை, கிராம சுகாதார செவிலியர் இந்துமதி மற்றும் இளநிலை உதவியாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியர் 8 இடங்களிலும், கிராமப்புற பகுதியில் 17 இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டது.

செஞ்சி: செஞ்சி பஸ் நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் தொடங்கி வைத்தார். சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மலர்விழி, ஆய்வாளர் ஏழுமலை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதேபோன்று செஞ்சி, மேல்மலையனூர், மேல்சித்தாமூர், திருவம்பட்டு உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Related Stories: