×

போலியோ சொட்டு மருந்து வழங்கல்

விழுப்புரம், ஜன. 20: விழுப்புரம் மாவட்டத்தில் 1,437 மையங்களில் 1,54,539 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நேற்று நடந்தது. தீவிரபோலியோ சொட்டு மருந்து பணிகளுக்காக அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசுமருத்துவமனைகள், ஆரம்பசுகாதாரநிலையங்கள், துணைசுகாதார மையங்கள், தனியார்மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசியநெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் என 1,437 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 5 வயதிற்குட்பட்ட 1,54,539 குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருத்து வழங்கப்பட்டது. இப்பணிகளில் பொதுசுகாதாரத்துறை பணியாளர்களுடன் பிறதுறையினரும், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 பேர் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 5,636 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், பேருந்துநிலையங்கள், ரயில்நிலையம், கோயில் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டுமருத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வரும் இரண்டு நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு போலியோ சொட்டுமருத்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம் அடுத்துள்ள கோனூரில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார். ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ஆட்சியர் அண்ணாதுரை கூறுகையில், அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டுமருத்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது. என கூறினார்.

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதியில் போலியோ சொட்டு மருந்து போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் சாய்வர்தினி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு முகாமை தொடங்கி வைத்தார். திருக்கோவிலூர் பகுதிகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயது கீழ் உள்ள 14, 344 குழந்தைகளுக்கு 115 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், மருத்துவர் வசுமதி, விக்னேஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரில் மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம நடந்தது. கல்லூரி  முதல்வர் குந்தவிதேவி தலைமை தாங்கி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு துவக்கி வைத்தார். ஆர்.எம்.ஓ., சாந்தி, டாக்டர்கள் திலகவதி, வினோத், சக்திவேல், செவிலியர்கள் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி பகுதியில் செங்கல் சூளையில் தங்கி ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க விக்கிரவாண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு அவர்கள் இருக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதுபோல் நரிக்குறவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்களது குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வழங்கப்பட்டது.
 
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் வட்டார சுகாதார நிலையம் சார்பில் தியாகதுருகம் பஸ்நிறுத்தம் பகுதியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அய்யப்பா, ஷியாம்சுந்தர், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கலந்து கொண்டு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். இந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமானது தியாகதுருகம் வட்டார பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், சாகாதார நிலையங்கள், பஸ் நிலையம் ஆகிய 90 மையங்களில் நடைபெற்றது. அரசு மருத்துவர்கள் சிவராஜ், அருண்குமார், ஜெயந்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், குமாரசாமி, முன்னாள் தலைவர்கள் நீலாவதிகதிர்வேல், குமார், பாலகிருஷ்ணன், இதயகண்ணன், நகர நிர்வாகிகள் வேல்நம்பி, அய்யம்பெருமாள், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை