லோக் தந்திரிக் ஜனதாதள தேசிய செயற்குழு கூட்டம்

நாகர்கோவில்,ஜன.20: லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் தெய்வராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் ேதசிய செயற்குழு கூட்டம், கட்சியின் தேசியத்தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்யாதவ்  தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர்கள், ேதசிய செயற்குழு உறுப்பினர்கள கலந்து கொண்டனர்.

தமிழக மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால், தேசியக்குழு உறுப்பினர் சிரில் கிறிஸ்துராஜ், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தெய்வராஜன், மாநில துணை தலைவர்கள் துரைசாமி, ஆறுமுகம், மாநில பொது செயலாளர் ஹேமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அஜித்சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தளம், உபேந்திரா குஷ்வாகாவின் லோக் சமதா கட்சி, முன்னாள் பீகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி மற்றும் அஜய் சிங் சவுதாலா, சிவபால்சிங் யாதவின் கட்சிகள் லோக்தந்திரிக் ஜனதா தளத்துடன் இணைவதை ஏகமனதாக வரவேற்றும், வரவிருக்கின்ற பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்டிரிய ஜனதாதளம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Lok Tantric Democratic National Working Committee Meeting ,
× RELATED சாலை விதி விழிப்புணர்வை கண்டறிய...