இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடையநல்லூரில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

கடையநல்லூர், ஜன. 19: குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடையநல்லூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமை வகித்தார். பிலால் மஸ்ஜித் இமாம் அப்துல் மஜீத் கிராஅத் ஓதினார். நகரத் தலைவர் செய்யது மசூது வரவேற்றார். மாவட்டச் செயலாளர் இக்பால் தொகுத்து வழங்கினார். முஸ்லிம் லீக் எம்எல்ஏக்களின் பேருரைகள் அடங்கிய 2ம் பாகம் நூலை தேசிய தலைவர் காதர் முகைதீன் வெளியிட்டுப் பேசினார். இதை மாநில பொருளாளர் ஷாஜகான், முகமது இஸ்மாயில், அமானுல்லா, முஹ்யித்தின் ஹஜரத்,  திமுக ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் அந்தோணி வியாகப் பன் பெற்றுக்கொண்டனர். திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்பி., மூத்த காங். தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முய்னுத்தீன், முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், தனுஷ்குமார் எம்.பி. சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் திமுக மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, ஒன்றியச் செயலாளர் டாக்டர் செல்லத்துரை, நகரச் செயலாளர் சேகனா, மாவட்டச் செயலாளர்கள் மதிமுக ராஜேந்திரன், விசிக டேனி அருள் சிங், மமக மாவட்டத் தலைவர் முகமது யாக்கூப், முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்டத் தலைவர் மீரான் மைதீன், செயலாளர் பாட்டபத்து முகமது அலி, பொருளாளர் கானகத்து மீரான், ஷிபா மருத்துவமனை முகமது ஷாபி, மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி,  விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் இப்ராகிம் ஷா, துணை அமைப்பாளர் லிவாவுதீன்,  தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மீராசா  மரைக்காயர், செயலாளர் மஹ்முதுல் ஹஸன், கலீல் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராகிம் நன்றி  கூறினார்.

முன்னதாக  இளைஞர்களின் குடியுரிமை பாதுகாப்பு எழுச்சி முழக்கம் நடந்தது. இதில் முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய இணைச்செயலாளர் முகம்மது அல் அமீன்,  முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத்தலைவர்கள் ஹபீபுல்லா, செய்யது பட்டாணி, கோதர்முகைதீன், மாநில கவுரவ ஆலோசகர் சம்சுல் ஆலம், நகரச் செயலாளர் அப்துல் லத்தீப்,  தலைமை நிலைய பேச்சாளர் முகமது அலி, இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நவாஸ்கான்,  தென் மண்டல அமைப்பாளர் பாட்டபத்து முகமது கடாபி, கவிஞர் கமால், திமுக மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, பேச்சாளர் இஸ்மாயில், இளைஞர் அணி ஆறுமுகச்சாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அஸ்ஸாம் மாநிலத்திற்கான தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பழைய நடைமுறையையே தொடர வேண்டும். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெற தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடியுரிமை திருத்த சட்டம், குடியுரிமை பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு சட்டங்களை  திரும்பப்பெறும் வரை தமிழகத்தில் திமுக தலைமையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுகவுடன் கூட்டணி தொடரும்

 மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்முகைதீன் பேசுகையில், ‘‘அனைத்து மக்களுக்கும் பொதுவான 72 ஆண்டு கால அரசியல் சட்டத்தில் பங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்படுவதை தான் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்த்து வருகிறது. சமயச் சார்புள்ள நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதால் குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிடக்கோரி பலரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதே போல் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே உள்ள என்ஆர்சியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. இச்சட்டதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என 13 மாநிலங்களில் முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இச்சட்டத்திற்கு முஸ்லிம்கள் மட்டுமே எதிர்ப்பதாக மாயை தோற்றத்தை உருவாக்கி இந்துக்களை ஒருங்கிணைக்க மத்திய அரசு முயல்கிறது. ஆனால், இந்துக்களும் இதை எதிர்க்கின்றனர். தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி என்றென்றும் தொடரும்’’ என்றார்.

Related Stories: