பைக் - டெம்போ மோதல் 4 பேர் படுகாயம்

குளச்சல்: குளச்சல் லியோன்நகர் பகுதியை சேர்ந்தவர் மரிய ஜோபு. இவரது மனைவி டென்ஸ்மேரி  சாமினி(24). இவர்களுக்கு மரிய ஜோபிகா(3), டாரியோ(1)என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் ஒரு பைக்கில் ஆலஞ்சியில் இருந்து லியோ நகர் நோக்கி வந்து  கொண்டிருந்தனர்.சலேட்நகர் பகுதியில் வந்தபோது, எதிரே  மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்த முருகன்(60) என்பவர் ஓட்டி  வந்த மினி டெம்ேபா எதிர்பாராதவிதமாக இவர்கள் பைக் மீது மோதியது. இதில்  தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர்  அவர்களை மீட்டு குழந்தை டாரியோவை குளச்சல் அரசு மருத்துவமனையிலும், மற்ற 3  பேரையும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்த புகாரின்பேரில்  குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : collision ,
× RELATED பஸ் மோதி பெண் பலி