×

மனித பாதுகாப்பு கழக மாநில மாநாடு நாகர்கோவிலில் ஜன.21ம் தேதி நடக்கிறது

நாகர்கோவில், ஜன.19: மனித பாதுகாப்பு கழகம் நடத்தும் மனித உரிமைகள் தினத்தையொட்டிய மாநில மாநாடு நாகர்கோவிலில் வரும் 21ம் தேதி நடக்கிறது. மனித பாதுகாப்பு கழகம் நடத்தும் மனித உரிமைகள் தினத்தையொட்டிய சர்வ மத மனித நேய மாநில மாநாடு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு குமரி மாவட்ட துணை தலைவர் மகாதேவன் தலைமையில் வரும் 21ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழக நிறுவன தலைவர் டாக்டர் ஜெய்மோகன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். மாநாட்டில் கழக பொதுச்செயலாளர் உஷா சிறப்புரையாற்றுகிறார்.

மும்மத தலைவர்களான ஆன்மிக மக்கள் அறக்கட்டளை நிறுவனர் ஜெயபகவதி புகழேந்தி, புனித தாமஸ் இவாஞ்சலின் சர்ச் ஆப் இந்தியா திருவனந்தபுரம் ஆயர் ஜார்ஜ் ஈபென், தக்கலை சமாதானய்யா அரபு கல்லூரி முதல்வர் மற்றும் அரசு தலைமை ஹாஜி மௌலானா மௌலவி அபு சாலிஹ் ஆகியோர் பங்கேற்று மதநல்லிணக்க உரையாற்றுகின்றனர். மக்கள் பார்வை செய்தி ஆசிரியர் செந்தில்குமார் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட தலைவர்கள், கழக நிர்வாகிகள், சமூக சேவகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் கழக செய்தி தொடர்பாளர் ஜேசுதாஸ் மேற்பார்வையில் மாநாட்டு விழாக்குழு தலைவர் ராமசாமிபிள்ளை தலைமையில் குமரி மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Human Rights Council State Conference ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...