×

தாராபுரம் அருகே பூ பொங்கல் வைத்து கொண்டாட்டம்

தாராபுரம், ஜன. 19:   தாராபுரம் அருகே பூ பொங்கல் வைத்து பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடி கொண்டாடினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெரமியம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி இளம்பெண்கள் பொங்கல் வைத்து, கும்மியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். 3 நாள் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஆண்டுக்கு ஒரு முறை வெளிமாநிலங்களில் வசிக்கும்  கிராமத்தை ேசர்ந்த மக்கள் தவறாமல் வருவது குறிப்பிடதக்கது. முன்னதாக மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க வீடுகள்தோறும் சென்று தாங்கள் எடுத்து வந்த அச்சு வெல்லம், செங்கரும்பு, மாவிலை தோரணக் கூடைகளை வீடுகளின் முன் வைத்து காமாட்சி அம்மனை வாழ்த்தி பாடல்களை பாடியவாறு கும்மியடித்து நடனம் ஆடினர். தொடர்ந்து ஆவாரம்பூ, பூளை பூக்களும் வைக்கப்பட்ட மூங்கில் கூடைகளை சுமந்தவாறு இரவு 10 மணி அளவில் பூ பொங்கல்கூடைகளை அமராவதி ஆற்றில் மிதக்க விட்டு குலவையிட்டு அம்மனை வழிபட்டனர்.   மேலும் கிராமத்து இளைஞர்கள் தீப்பந்தங்களை வைத்து நடனமாடியும், வீர விளையாட்டும்  விளையாடினர். இந்நிகழ்ச்சியில் பெரமியம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பூ பொங்கலை புன்னகை பொங்க உற்சாகமாக கொண்டாடினர்.

Tags : Celebration ,Tarapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்