×

தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பவுலோனியா மலர்கள்

ஊட்டி, ஜன. 19: தாவரவியல் பூங்காவில் மரம் முழுக்க பவுலோனியா பார்சினி மலர்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சீனா நாட்டை சேர்ந்த பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் வகையை சேர்ந்த ஒரு மரம் மட்டும் உள்ளது. இந்த மரத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இம்முறை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால், பனி பொழிவு குறைந்து காணப்பட்டது. இதனால், பனி காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் பூக்காமல் இருந்தது.

கடந்த மாதம் மரம் முழுவதும் மொட்டுக்களே காணப்பட்டது. ஒரு சில கிளைகளில் மட்டும் பூக்கள் பூக்கத்துவங்கின. தற்போது மரம் முழுக்க பூக்கள் பூத்துள்ளன. மரங்களில் எங்கும் இலைகள் இன்றி மரம் முழுக்க இளஞ்சிவப்பு நிறம் கலந்த வெள்ளை நிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. தற்போது நடவு பணிகள் நடக்கும் நிலையில், பூங்காவில் ஒரு சில செடிகளில் மட்டுமே பூக்கள் உள்ளன. இதனால், அரிதாக காணப்படும் இந்த மலர்களின் அருகே நின்று புகைப்படம் எடுக்க முடியாத நிலையில், மரத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Tags : Botanic Gardens ,
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்