×

பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானத்திற்கு செல்ல தடை

ஊட்டி, ஜன. 19:  ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏப்ரல் மாதம் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சியின்போது மாடங்களில் பல்வேறு மலர் அலங்காரங்களை மேற்கொள்வதற்காக தற்போது 35 ஆயிரம் தொட்டிகளை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த தொட்டிகளில் தற்போது நாற்று நடவு பணிகள் நடந்து வரும் நிலையில், பனியில் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

மேலும், நாள்தோறும் இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 35 ஆயிரம் தொட்டிகளும் பெர்ன் கார்டன் எனப்படும் சிறிய புல் மைதானத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு தொழிலாளர்கள் நடவு பணி, அவைகளை பாதுகாக்க கோத்தகிரி மிலார் செடிகள் நடும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் நடந்து வருகிறது. இதனால், இந்த புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதித்தால் பணிகள் பாதிக்கும் என்பதாலும், புல் மைதானம் சேறும் சகதியுமாக மாறும் என்பதாலும், புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Botanic Gardens ,grass ground ,
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்