×

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளியில் சாரல் மழையால் முடங்கிய மக்கள்

கிருஷ்ணகிரி, ஜன.19: கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளியில் நேற்று பெய்த திடீர் சாரல் மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் கடும் பனி பொழிவும், பகலில் வெயிலும் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதலே பனி பொழிவு மிக குறைவாகவே இருந்தது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மழைக்கான அறிகுறிகள் தெரிந்தது. இதையடுத்து காலை 10 மணியளவில் திடீர் சாரல் மழை பெய்தது. மழையால் சாலையோர காய்கறி கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். 10 நிமிடம் மட்டுமே பெய்த இந்த சாரல் மழையால் குளிர்காற்று வீச துவங்கியது. மாலை வரை மேகமூட்டம் தொடர்ந்து நீடித்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல், போச்சம்பள்ளியிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இதனால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சளி, காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தஞ்சமடைந்துள்ளனர். போச்சம்பள்ளியில் கடும் பனி பொழிவால் வாகன ஓட்டிகள் காலை 9 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலையிலிருந்து மதியம் வரை லேசான சாரல் மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பொங்கல் விழாவை கொண்டாடிய நிலையில், சாரல் மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Krishnagiri ,Pochampalli ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி