இந்திய விமான படையில் ஆள்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.19: இந்திய விமான படையில் ஆள்சேர்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமான படையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் 2000ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி முதல் 2001ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதிக்குள் பிறந்த, திருமணமாகாத 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் தேர்ச்சி பெற்று, 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது விமான படையில் குரூப் ஒய் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் பங்கு பெற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, தகுதி வாய்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு WWW.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indian Air Force Recruitment Online ,
× RELATED பேளூர் கிராமத்தில் காவலம்மா கோயிலுக்கு பூமி பூஜை