‘சின்ன வீடாக செட்டிலான’ கள்ளக்காதலிக்கு அடி, உதை வசமாக சிக்கிய காதலன் கைது

திருச்சி, ஜன. 19: மணப்பாறை அடுத்த கவரப்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார்(25). இவர் மலேசியாவில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு சென்னையை சேர்ந்த பர்வீன்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் பர்வீனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருவரின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவரும் இந்தியா திரும்பினர். தொடர்ந்து குடும்பத்தினருக்கு தெரியாமல் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து பர்வீனுடன் வினோத்குமார் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில் வினோத்குமாருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தாய் தமிழரசி முடிவு எடுத்து திவ்யபாரதி என்பவருடன் நிச்சயம் செய்தார்.

Advertising
Advertising

இதில் வினோத்குமார் கள்ளக்காதலியை வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளது குறித்து அறிந்த தாய் தமிழரசி, திவ்யபாரதி இருவரும் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். துரைசாமிபுரம் வந்த இருவரும் பர்வீனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பர்வீன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த பாலக்கரை போலீசார் வினோத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மாயமான தமிழரசி, திவ்யபாரதியை தேடி வருகின்றனர்.

Related Stories: