தாய் உள்பட 2 பேருக்கு வலை திருச்சியில் இன்று 267 இடங்களில் முகாம்கள் அமைத்து 88,542 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

திருச்சி, ஜன.19: திருச்சி மாநகரில் சுமார் 88,542 குழந்தைகளுக்கு 267 இடங்களில் முகாம்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கிட மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்–்கப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாமில் சுமார் 88,542 குழந்தைகளுக்கு 267 இடங்களில் முகாம்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்–்கிட மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், சத்துணவு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 267 இடங்–்கள், மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தளங்கள் என 15 இடங்களிலும், 5 நடமாடும் குழுக்கள் (தற்காலிக குடியிருப்புகள், செங்கல் சூலை) மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்கள் வீட்டில் உள்ள பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் போலியோ நோய் வராமல் தடுத்திடவும், போலியோ இல்லாத இந்தியா உருவாக்குவதில் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை தரவேண்டும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: