மாநகராட்சி ஆணையர் தகவல் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

திருச்சி, ஜன.19: மணப்பாறை கல்வி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட நவலூர்குட்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் இணைந்து பள்ளிப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த 10, 13 ஆகிய இரு நாட்கள் பள்ளிகளுக்கு மாறி, மாறி சென்றனர். அப்பள்ளிகளில் காலை வழிபாட்டுக்கூட்டம் முதல் மாலை வரை பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக களப்பயணத்தில் நவலூர்குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சென்றனர். தலைமை ஆசிரியர்கள் அன்பரசன், ஜூலியட்ரூபெல்லா, மகேஸ்வரி, சுதா, பாக்கியலட்சுமி ஆகியோர் உடன் சென்று வழிகாட்டினர். கல்லூரியின் புதிய நெல் ரக கண்டுபிடிப்புகள், வேளாண் துறை முக்கியத்துவம் குறித்து அறிந்துகொண்டனர். தனித்திறன் வெளிக்காட்டுதல் நிகழ்வுகளில் மாணவ, மாணவிகள் ஆர்த்துடன் பங்கேற்றனர். பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியால் வேறு பள்ளியை பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

வேளாண் பல்கலைக்கும் களப்பயணம் சென்றனர்

Related Stories: