போலீஸ் விசாரணை விபத்தில் காயமடைந்த ஏசி மெக்கானிக் சாவு

திருவெறும்பூர், ஜன.19: திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஏசி மெக்கானிக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் பிரபாகரன்(22). ஏசி மெக்கானிக். இவர் கடந்த 15ம் தேதி ஓஎப்டி அருகே உள்ள 100 அடி சாலை வழியாக தனியார் பொறியியல் கல்லூரியை நோக்கி பைக்கில் சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது இவரது பைக் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த வாகனத்தின் மீது இவர் விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் பிரபாகரனை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: