×

திருவாரூர் மாவட்டத்தில் 182.4மிமீ மழை பதிவு

திருவாரூர், ஜன. 19: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 17ந்தேதி முதல் துவங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மற்றும் மிதமான மழையாக பெய்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இந்த மழை பெய்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த மழை ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று காலையில் துவங்கிய மழையானது மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் இடைவிடாது தொடர்ந்து மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக திருவாரூர் நகரில் தெற்கு வீதி, மேலவீதி,பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் மொத்தம் மூன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிகள் நடைபெற்று தற்போது ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. மழை காரணமாக நேற்று அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: திருவாரூர் 24 மி.மீ, நன்னிலம் 3.4 மி.மீ, குடவாசல் 8.2 மி.மீ, வலங்கைமான் 7.2 மி.மீ, திருத்துறைபூண்டி 22 மி.மீ, முத்துப்பேட்டை 12 மி.மீ, நீடாமங்கலம் 45.2 மி.மீ, மன்னார்குடி 10 மி.மீ, பாண்டவையாறு தலைப்பு 50.4 மி.மீ என மொத்தம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 182.4 மி.மீ மழையும்,

Tags : rainfall ,Thiruvarur ,district ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது