×

நெல்கொள்முதலை துரிதப்படுத்த தஞ்சையில் 21ம் தேதி முத்தரப்பு கூட்டம்

மன்னார்குடி, ஜன. 19: மன்னார்குடியில்அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேரடி கொள்முதல் நிலையங்களை தேவைக்கேற்ற இடங்களில் உடனடியாக திறந்திட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி விவசாயிகளுக்கு எங்கெங்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவையோ அந்தந்த இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்கொள்முதலை துரிதப்படுத்த வேளாண்மைதுறை, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் வரும் 21ம் தேதியன்று தஞ்சையில் நடைபெற உள்ளது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், உயரதிகாரிகள் பங்கேற்று அதில் விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அவற்றை செம்மை படுத்தும் நடவடிக்கை துறைரீதியாக எடுக்கப்படும்.

நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு தான் நிர்ணயம் செய்கிறது. கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நெல்லுக்கான ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.1080 தான் இருந்தது. தற்போது அது படிப்படியாக உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட ரூ.2 ஆயிரம் அளவிற்கு வந்துள்ளது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கை ஏற்று சன்ன ரகத்திற்கு ரூ.70ம், சாதாரண ரகத்திற்கு ரூ.50 ஊக்கத்தொகையும் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதன்படி கடந்த 2011ம் ஆண்டு முதல் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் ரூ.718 கோடி ஊக்க தொகையாக வழங்கி உள்ளோம். ஈரப்பதம் கொண்ட நெல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Tags : meeting ,paddy strike ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...