×

சமத்துவ பொங்கல் விழா

திருத்துறைபூண்டி, ஜன. 19: திருத்துறைப்பூண்டி அருகே கடியாச்சேரியில் உள்ள சோழன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது . திமுக எம்எல்ஏ ஆடலரசன் தலைமை வகித்தார். நலச்சங்க நிர்வாகிகள் , 6வது வார்டு ஊராட்சி பிரதிநிதி வசந்தி மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டி , சிறுவர்களுக்கான ஓட்டபோட்டி, கிழங்கு திரட்டல் , பெரிவர்களுக்கான சைக்கிள் போட்டி , லக்கி கார்னர் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன . . போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ ஆடலரசன் பரிசுகள் வழங்கினார் .

Tags : Equality Pongal Festival ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா