துர்நாற்றத்தால் மக்கள் அவதி குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குடந்தையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன. 19: குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குடந்தையில் நேற்று திமுக, கம்யூனிஸ்ட், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அன்பழகன் எம்.எல்.ஏ, எஸ்.டிபி.ஐ மாவட்ட செயலாளர் இப்ராகீம், தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜாபர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பாலபாரதி கூறும்போது, இந்த சட்டத்தை 13 மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என அந்தந்த மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர். அதுபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தமிழகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடும்போது கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories: