×

நண்பருக்கு வலை புதுக்கோட்டை மாவட்டத்தில் சைக்கிள் தினவிழா விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி,ஜன.19: இந்திய சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணியை ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி தொடக்கி வைத்தார். பிட் இந்தியா திட்டத்தின்கீழ் அனைவரும் சைக்கிள்களை ஓட்டி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 18ம் தேதியை இந்திய சைக்கிள் தினமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய சைக்கிள் தினத்தை முன்னிட்டு, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் திருப்பெருந்துறை ஊராட்சியில் சைக்கிள் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி தலைமை வகித்து பேரணியை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் வீரப்பன் முன்னிலை வகித்தார்.

பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன், சுந்தரபாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவர் சந்திராராஜமாணிக்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், குமாரசாமி, திருப்பெருந்துறை ஊராட்சி செயலர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பொன்னமராவதி: பொன்னமராவதி ஒன்றியம் வேந்தன்பட்டியில் தலைவர் சுமதி, பி.உசிலம்பட்டியில் ஊராட்சித்தலைவர் ஆனந்த், கண்டியாநத்தம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் செல்வி ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு சைக்களில் பேரணி நடைபெற்றது. இதேபோல தொட்டியம்பட்டியில் நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பிட் இந்தியா மதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன் தலைமையில் பொதுமக்கள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். இதில் விடிவௌ;ளி அறக்கட்டளை இயக்குனர் மலர்விழி, வழக்கறிஞர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நேருயுவ கேந்திரா சார்பில் நடத்திய மாவட்ட அளவிலான ஆரோக்கிய இந்தியா இளையோர் சைக்கிள் பேரணி புதுக்கோட்டையில் நடைபெற்றது. சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் முன்னிலையில் இயற்கை ஆர்வலர் மூர்த்தி பேரணியை தொடங்கி வைத்தார். நேருயுவ கேந்திரா கணக்காளர் நமச்சிவாயம் பேரணியின் நோக்கம் பற்றி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சதாசிவம் வாழ்த்தி பேசினார். பேரணியில் 70க்கும் மேற்பட்ட இளையோர் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புத்தாஸ் நிறுவனர் சேது கார்த்திகேயன் வரவேற்றார்.

நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் விக்னேஸ்வர் நன்றி கூறினார். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பிட் இந்தியா சைக்கிள் பேரணியை ஒன்றியப் பெருந்தலைவர் ரெத்தினவேல் என்ற கார்த்திக் முன்னிலையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர்பாலமுரளி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மயில்வாகணன், அருள்பிரகாசம், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bicycle Festival ,Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...